வாழ்வும் கலாசாரமும்செய்தி
மொனராகலையில் ஐந்து தொல்பொருள் இடங்கள் சுற்றுலாப் பயணிகளுக்குத் திறப்பு: அமைச்சர் பாராளுமன்றில் தகவல்
மொனராகலை மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்களம் பாதுகாத்து வரும் இடங்களில் புத்துருவகல, மாளிகாவில, யுதகனாவ, கலபெத்த, தெமடமல் விகாரை ஆகிய ஐந்தும் உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்குத் திறக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி பாராளுமன்றில் தெரிவித்தார்.
